Saturday, 28 October 2017

தலைவர் கலைஞரின் இலக்கியஇலக்கிய சோலை

தலைவர் கலைஞரின் இலக்கிய சோலை...


(Siva Thennarasu)#

தலைவர்_கலைஞர் 

1980களில் கட்சி தோல்வி அடைந்த நேரம்.

அதிமுக செய்த சில தகிடுதித்தோம் வேலைகளில் திமுக வெற்றியினை தவறவிட்டது. டெல்லி வழக்கம் போல ராமசந்திரனுக்கே உதவியதில் திமுக தோற்கடிக்கபட்டது

இலக்கிய கூட்டமொன்றில் பேசுகின்றார், அரசியல் மேடை அல்ல. எதெல்லாமோ சுற்றி வந்த அவரின் பேச்சு இப்படி முடிந்தது

"வாலியின் வீரத்தை வெல்லமுடியாத ராமசந்திர மூர்த்தி அவனை மறைந்திருந்து தாக்கி கொல்கின்றான்

ஆம், மறைந்திருந்து அடிப்பது வீரமுமல்ல. துரோகத்தால் சரிந்தது வாலிக்கு இழுக்கும் அன்று

ராமசந்திர மூர்த்தி வென்றாலும் அவனுக்கு காலெமல்லாம் அது கறையே, பழியே. 

வீழ்ந்தாலும் வாலியின் வீரம் காலமெல்லாம் நிற்கும்."

அர்த்தம் புரிந்த  கூட்டத்தின் கைதட்டல் அடங்க நெடுநேரமானது.

இப்பொழுதெல்ல, எப்பொழுதும் அந்த மனிதனை மனம் தேடத்தான் செய்கின்றது.!

#வாழ்க_தலைவர்.... Mohamed Ismail


No comments:

Post a Comment