Wednesday, 1 November 2017

@WriterRavikumar:

தெற்கிலிருந்து ஒரு சூரியன் நூலில் இடம்பெற்றுள்ள எனது கட்டுரை https://twitter.com/WriterRavikumar/status/925467618923880449/photo/1

Monday, 30 October 2017

திமுக

திராவிட முன்னேற்றக் கழகம்

திராவிட இயக்க வரலாறு
கலைஞர் கருணாநிதி
DMK
Dravida munnetra kazhagam

கருணாநிதியின் வாழ்க்கை ஒரு சமூகப் புரட்சி!
- யோகேந்திர யாதவ்

கருணாநிதியின் வாழ்க்கை ஒரு சமூகப் புரட்சி!
- யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ் சமூகவியல் அறிஞர், ஆம்ஆத்மி கட்சியை நிறுவியவர்களில் ஒருவர்

கருணாநிதியின் நெடிய அரசியல் வாழ்வை, சமீபத்திய வரலாற்றைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளில் ஒன்றாகவே குறிப்பிடலாம். நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் சமூக நீதி இயக்கத்தின் சாதனைகளையும் இந்தியாவில் கூட்டரசைக் கட்டமைப்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்புகளையும் வெளிக்காட்டும் கண்ணாடி அவருடைய வாழ்க்கை! தமிழ்நாட்டின் திராவிட இயக்கம் நாட்டின் பிற பகுதியில் உள்ள இயக்கங்களுக்கு ஒரு வழிகாட்டி. அரை நூற்றாண்டாகத் தமிழ்நாட்டின் ஆட்சியதிகாரம் இரு திராவிடக் கட்சிகளையும் தாண்டிச் செல்லாமல் இருக்க சமூக நீதி இயக்கமே முக்கியமான காரணம். சமூக நீதிக்கான இயக்கத்தை வெற்றிகரமான அரசியல் கட்சியாக மாற்றிய முதல் தலைமுறை அரசியல்வாதிகளில் முக்கியமானவர் கருணாநிதி.

Karunanidhi's life is a social revolution
 - Yogendra Yadav

Yogendra Yadav Sociologist, one of the founders of the Aam Aadmi Party is one of the mirrors reflecting Karunanidhi's long political life and recent history. Compared to other parts of the country, the mirror of the social justice movement in Tamil Nadu and the mirror of the Dravidian movement in building the federation in India is his life! Tamil Nadu's Dravidian Movement is a guide to movements in other parts of the country. The social justice movement is the main reason for Tamil Nadu's rule not to cross two Dravidian parties for half a century. Karunanidhi is one of the first generation politicians who transformed the movement of social justice into a successful political party.

Saturday, 28 October 2017

தலைவர் கலைஞரின் இலக்கியஇலக்கிய சோலை

தலைவர் கலைஞரின் இலக்கிய சோலை...


(Siva Thennarasu)#

தலைவர்_கலைஞர் 

1980களில் கட்சி தோல்வி அடைந்த நேரம்.

அதிமுக செய்த சில தகிடுதித்தோம் வேலைகளில் திமுக வெற்றியினை தவறவிட்டது. டெல்லி வழக்கம் போல ராமசந்திரனுக்கே உதவியதில் திமுக தோற்கடிக்கபட்டது

இலக்கிய கூட்டமொன்றில் பேசுகின்றார், அரசியல் மேடை அல்ல. எதெல்லாமோ சுற்றி வந்த அவரின் பேச்சு இப்படி முடிந்தது

"வாலியின் வீரத்தை வெல்லமுடியாத ராமசந்திர மூர்த்தி அவனை மறைந்திருந்து தாக்கி கொல்கின்றான்

ஆம், மறைந்திருந்து அடிப்பது வீரமுமல்ல. துரோகத்தால் சரிந்தது வாலிக்கு இழுக்கும் அன்று

ராமசந்திர மூர்த்தி வென்றாலும் அவனுக்கு காலெமல்லாம் அது கறையே, பழியே. 

வீழ்ந்தாலும் வாலியின் வீரம் காலமெல்லாம் நிற்கும்."

அர்த்தம் புரிந்த  கூட்டத்தின் கைதட்டல் அடங்க நெடுநேரமானது.

இப்பொழுதெல்ல, எப்பொழுதும் அந்த மனிதனை மனம் தேடத்தான் செய்கின்றது.!

#வாழ்க_தலைவர்.... Mohamed Ismail


திராவி முன்னேற்றக் கழக வரலாறு


தமிழின தலைவரின் வெற்றி வரலாறு...


#சென்னைமாநகராட்சியும்_திமுகழகமும்

சென்னை மாநகராட்சியை திமுகழகம் கைப்பற்றிய வருடம் 1959ம் வருடம் ஏப்ரல் மாதம். அப்போது சென்னை மாநகராட்சி 100 வட்டங்களாக பிரிக்கபட்டது. 

தேர்தலில் பல கட்சிகள் போட்டியிட்டாலும் பிரதான போட்டி என்பது திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தான். 

மாநகராட்சி தேர்தல் பொறுப்பை நம் #தலைவர்கலைஞருக்கு வழங்கினார்  பேரறிஞர்அண்ணா.

பேரறிஞர் அண்ணா, கலைஞர், நாவலர், பேராசிரியர், ஈவெகி சம்பத், எம் ஜி ஆர் , கண்ணதாசன் ஆகியோர் நாள் தோறும் ஒரு ஒரு வட்டமாக பிரிந்து பொதுக்கூட்டம் பேசினர்.

மொத்தம் உள்ள 100 இடங்களில் நமது திமுக 90 இடங்களில் போட்டியிட்டது. காங்கிரசோ நூறு இடங்களிலும் போட்டியிட்டது. 

தேர்தலில் இரவு பகல் பார்க்காமல் #தலைவர்கலைஞர் தேனீயைப்போல சுற்றி சுழண்டு பணியாற்றினார். ஒரு கட்டத்தில் பேரறிஞர்அண்ணா "நாம் 20 இடங்களில் வெற்றி பெற்றால் கூட அது மாபெரும் வெற்றி தான்" என ஊழியர் கூட்டத்தில் சொன்னார்.

உடனே ் தலைவர் கலைஞர் அவர்களோ " இல்லை அண்ணா நாம் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று 
#சென்னை_மாநகராட்சியை_பிடிப்போம்" என சொன்னார்.

 அதற்கு அண்ணாவோ "அப்படி பெற்றால் என் தம்பி கருணாநிதிக்கு நான் #கணையாழி_அணிவிப்பேன்" என அறிவித்தார்.

சும்மாவே ஆடுவார் கலைஞர்
அண்ணா அவர்களோ சலங்கையை வேறு தலைவருக்கு கட்டிவிட்டுவிட்டார் அல்லவா தன் தலைவன் கையால் மோதிரம் வாங்க வேண்டும் என்கிற தீராத ஆசை நம் தலைவருக்கு. !!!!

தேனியும் தோற்க்கும் தலைவரின் தேர்தல் வேலை பார்த்து எதிர்கட்சியினர் அரண்டு போயினர்.
 காங்கிரசார் பணத்தை தண்ணீராக செலவழித்தனர்.

் தேர்தல் முடிவு வந்தது. நாம் போட்டியிட்ட 90 இடங்களில் 45 இடங்கள் வெற்றி பெற்றோம்.

 காங்கிரஸ் 100 இடங்கள் போட்டியிட்டு 36 இடங்கள் பெற்றது. 
இருபது ஆண்டுகால காங்கிரஸ் கோட்டை தகர்ந்து சுக்கு நூறாக்கினார் அஞ்சுகத்தாயின் அருந்தவப்புதல்வர் சென்னையில்.

1959ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி
 மேயர் தேர்தல் நடைபெற்றது. 
அது நடைபெறும் முன்னர் வெற்றி பெற்ற திமுக உறுப்பினர்கள் அனைவ்ரும் ரிப்பன் கட்டிடம் முன்பாக கம்பீரமாக காட்சி அளிக்கும் வெள்ளுடைவேந்தர்
#சர்_பிடி_தியாகராயர் சிலைக்கு இருபக்கமும் நின்று மரியாதை செலுத்தினர்

 நம் தலைவர் கலைஞரும் , நாவலரும் சிலைக்கு அருகே இருந்த மேடையில் ஏறி ஆளுயர மாலையை சர் தியாகராயருக்கு அணிவித்தனர். கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளுடை வேந்தரை வணங்கினர்.

கழக தலைவர்களுடன் 
திமுக உறுப்பினர்கள் 
ரிப்பன் மாளிகைக்கு சென்றனர்.
அங்கு மேயர் தேர்தல் நடைபெற்றது. கழகத்தின் சார்பில் அண்ணன் 
#அ_பொ_அரசு அவர்களும் 
காங்கிரஸ் சார்பில் 
ஜி.ராஜமன்னாரும் போட்டியிட்டனர். 

45இடங்களை மட்டுமே பெற்றுள்ள திமுக வெற்றி பெற முடியாது என்று ஆருடம் சொன்னார்கள்.
ஐம்பது வாக்குகள் பெற்று திமுகழக மேயர் வேட்பாளர் நம் அண்ணன் #அ_பொ_அரசு திமுகவின் முதல் மேயர் ஆனார்.
 45 வாக்குகளுடன் ராஜமன்னார் தோல்வியடைந்தார்.

அதன் பின்பு நடந்ததுணை மேயர் தேர்தலில் கழகத்தின் வேட்பாளர் #பி_சிவசங்கரன் 52 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஜி. கண்ணன் 40 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
#தலைவர்கலைஞர் சொன்னது போலவே அண்ணாவுக்கு வெற்றிக்கனியை பரிசளித்தார். 

பேரறிஞர்அண்ணா தம்பி உனக்காக ஐந்தாறு கடை நானே நேரடியாக ஏறி இறங்கி பார்த்து கணையாளி வாங்கினேன் என்று ஆரத்தழுவி ஆனந்தகண்ணிரோடு
தலைவர்கலைஞருக்கு #மோதிரம் பரிசளித்தார். 

அந்த மோதிரம் இன்று வரை 
நம் தலைவர் விரல்களை 
அண்ணாவின் நினைவாக அழகுபடுத்திக்கொண்டு உள்ளது.

#தன்னை_வெல்வான்_தரணி_ஆள்வான்